Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருச்சி மாவட்டத்தில்  ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?..

The husband who went to bathe in the river in Trichy district is delusional? What is the condition of the wife?

The husband who went to bathe in the river in Trichy district is delusional? What is the condition of the wife?

திருச்சி மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?..

திருச்சி மாவட்டம் தொட்டியம் காவிரி ஆற்றில் தண்ணீர் தலை புரண்டு ஓடுகிறது. திருமணமாகி  இரண்டே நாளான புது தம்பதிகள் அவ்வாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளர்கள் . காவிரி ஆற்றின் வேகம் உயர்ந்துள்ளதை அறியாதவர்கள் ஆற்றின் உள்ளே இறங்கியுள்ளனர்.

புது தம்பதிகளான வினோத் மற்றும் திவ்யா உள்ளிட்ட ஐந்து பேர் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது தண்ணீரின் வேகத்திற்கு  ஈடு கட்ட முடியாமல் வினோத் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து அவர்களுடன் குளிக்கச் சென்ற மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கரையேறினார்கள்.

பின்னர் முசிறி தீ தடுப்பு நிலையத்திற்கு தொட்டியம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மீட்பு பணியினர் ஆற்றின் உள்ளே இறங்கி மும்மரமாக வினோத்தை தேடி வந்தனர். மூன்று நாட்களாகியும் வினோத் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து தொடர் மீட்பு பணியினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் கண் முன்னே கணவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version