பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தை செய்த வெறிச்செயல்!
புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த தென்திரையான் பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் என்பவர் ஆவார்.இவருக்கு மூன்று மனைவிகள் மற்றும் பதினோறு மகள்களும் உள்ளனர்.இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவி கடந்த 2019 ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றது.அதனை அடிப்படையாக வைத்து போலீசார் முருகேசனை விசாரித்தனர்.
அந்த விசாரணையின் முடிவில் போலீசாரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த விசாரணையின் போது முருகேசனின் இரண்டாவது மனைவியின் 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்,இதனால் ஆத்திரமடைந்த மனைவி முருகேசனிடம் தகராறு மேற்கொண்டதால் மனைவியை அடித்தே கொன்றதாகவும் தெரிந்தது.மகளின் மீது ஏற்பட்ட மோகத்தினால் மனைவியை கொலை செய்யும் அளவிற்கு கொண்டு சென்று விட்டதும் தெரிய வந்தது.இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முருகேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு விசாரணையானது புதுகோட்டை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சத்யா அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.அந்த வழக்கின் தீர்ப்பாக மனைவியை கொலை செய்ததற்க்காகவும்,மகளை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகவும் முருகேசனுக்கு மரணதண்டனையும்,ஒரு இலட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 இலட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.