இளையராஜாவை பார்த்து சிரித்த அம்மன்! முதல் படத்திலேயே நடந்த அபசகுணம்!

0
294
#image_title

இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி என்பது அனைவருக்கும் தெரியும்

இந்த படம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்தது சுஜாதா சிவக்குமார் ஆகியோர்கள் நடித்திருப்பார்கள்.

 

வாய்ப்பு தேடி அலைந்த இரண்டு இளைஞர்களுக்கு முதன் முதலில் தனது படங்களில் இசையமைக்க அனுமதி தந்தவர்தான் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.

 

அப்படி முதல் படத்திலேயே இவ்வளவு அபசகுணம் நடந்திருக்கிறது.

 

அன்றைக்கு தான் அன்னக்கிளி யின் முதல் பாடல் ரெக்கார்டிங் செய்யப்படுகிறது. அதனால் இளையராஜா , அமரன், பாஸ்கர் மூவரும் திருவேற்காடு அம்மனை தரிசிக்க சென்று இருக்கிறார்கள்.

 

பல நாள் பல வாய்ப்புகளைத் தேடி பலரால் அவமானப்பட்டு, இன்றைக்கு இந்த நிலை வந்துள்ளது என்று சந்தோஷப்பட்ட சகோதரர்கள் அம்மனை தரிசிக்க அர்ச்சனை செய்ய திருவேற்காடிற்கு செல்கிறார்கள்.

 

நன்றாக கண்ணை மூடி பிரார்த்தனை செய்து விட்டு நிமிர்ந்து அம்மனை பார்க்கும் பொழுது பயந்து போகிறார் இளையராஜா. ஏனென்றால் அவரைப் பார்த்து சிரித்த அம்மன்,’ இன்னும் உனது சோதனை காலம் முடியவில்லை மகனே பொறுமையாக இரு” என்று சொல்லியது போல் ஒரு உணர்வு இளையராஜாவிற்கு ஏற்பட்டுள்ளது.

 

ஏற்கனவே போட்டியாக பலர் உள்ளார்கள். அதுமட்டுமின்றி பஞ்சு அருணாச்சலத்திடம் இளையராஜா ஒரு ராசியில்லாதவன். எம் எஸ் விஸ்வநாதன் வைத்த இசையமைத்தால் பணம் பார்க்கலாம் என்றெல்லாம் அவரை குழப்பியிருக்கிறார்கள். என்ன நடக்குமோ? என இளையராஜா பயந்து போகிறார்.

 

ஒலிப்பதிவுக்கு நேரமாகியது. மூன்று சகோதரர்களும் வேக வேகமாக கோயிலில் இருந்து புறப்பட்டு நேரடியாக ரெக்கார்டிங் தியேட்டருக்கு செல்கிறார்கள்.

 

மனதில் மிகவும் பயத்துடன் அம்மனை வேண்டி ஒன் டு த்ரீ என சொல்ல ஆரம்பிக்கிறார். அடுத்த நிமிடமே கரண்ட் கட்,

 

உடனே அங்கிருந்த ஒருவர் நல்ல சகுனம் என்று சொல்கிறார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல் நிலைகுலைகிறார் இளையராஜா. அங்கு உள்ள ஒரு தனி அறைக்குள் சென்று நின்று விடுகிறார் இளையராஜா. அமைதியாக காத்திருக்கிறார் அப்பொழுது அம்மனின் புன்னகைத்த முகம் ஞாபகம் வந்தது.

 

மின்சாரம் வந்தது. மறுபடியும் பூஜை கற்பூரம் மறுபடியும் பாடல் தொடங்கியது. ஜானகி அவர்கள் அந்த பாடலை பாடி முடிக்கிறார்கள்.

 

அங்கிருந்த ரெக்கார்டிங் இன்ஜினியர் மறுபடியும் பாட சொல்லலாம் என சொல்லி இருக்கிறார். இளையராஜா அவர்கள் இல்லை பாடலை ஒரு முறை கேட்போம் என்று அவர் சொல்ல, டேப்பை ரீவைண்ட் செய்து போட்டார்கள். டேப் ஓடுகிறது ஓடுகிறது ஆனால் பாடல் பதிவாகவில்லை.

 

அனைவரும் பஞ்சு அருணாச்சலத்தின் முகத்தை பார்க்கிறார்கள். அவர் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

 

12 டேக் மேல் இந்த பாடல் ஒளிப்பதிவானது. கண்களில் ஈரம் கசிய தனது கனவை நிறைவேற்றிவிட்டு இளையராஜா அமைதியாக கண் திறக்கிறார்.

 

எதிரில் பஞ்சு அருணாச்சலம் புன்னகைத்தபடி அவரையே பார்த்திருக்கிறார்

.அப்பொழுது அந்த முகம் அந்த அம்மன் சிரித்த முகம்

அவருக்கு நினைவு வருகிறது.