Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை!

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே கோவிலின் முன் யாருக்கும் தெரியாத ஒரு மாதமே ஆன குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது.

வாலாஜாபேட்டை அருகே வன்னிவேடு கிராமத்தில் உள்ள அவர் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது.அதனை பார்த்த மக்கள் உடனடியாக அழுது கொண்டிருந்த ஆண் குழந்தையை  மீட்டு வாலாஜாபேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த ஆண் குழந்தைக்கு ஒரு மாதம் மட்டுமே இருக்கும் என சொல்லப்படுகிறது.

தகவலறிந்த போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த போலீசார் ஆதரவில்லாத அந்த ஆண் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கோவில் முன்பு வீசப்பட்ட குழந்தை யாருடையது என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை வீசப்பட்டு விட்டுச் சென்ற சம்பவம் அங்குள்ள மக்களை பதற்றம் அடைய செய்து இருக்கிறது.

குழந்தைகள் இல்லாமல் பலபேர் கஷ்டப்பட்டு வரும் நிலையில் இந்த மாதிரியான சம்பவம் நெஞ்சை கரைக்கும் சம்பவமே.

Exit mobile version