CHENNAI: பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, ஆபாச வீடியோக்கள் எடுத்து தந்தையே விற்பனை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்கள் மீதான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்க மசோதாவை சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றினார். இந்த நிலையில் பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதிகள் பணம் சம்பத்து உள்ளார்கள் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது,சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, சிறுமியின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்த ஒருவரை கைது செய்து உள்ளார்கள். அந்த நபரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த நபர் ராஜா அண்ணாமலை புரத்தை சேர்ந்தவர் என்றும், பணம் சம்பாதிப்பதற்காக பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்து இருப்பதும் அதற்கு உடந்தையாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உடந்தையாக இருந்தது இருக்கிறார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், அந்த நபரிடம் இருந்து கைப்பற்றிய செல் போன்களை ஆய்வு செய்ததில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தோழிகளின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. எனவே, தம்பதியினரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.