கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் உடல் துண்டான பரிதாபம்! சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு!
பொதுவாக பேருந்து மற்றும் ரயில் பயணங்களின்போது படிக்கட்டுகளில் நிற்க கூடாது என்று அரசாங்கம் தொடர்ந்து கூறி தடை விதித்து வருகிறது. அவ்வாறு நிற்பதனால் பல விபரீதங்கள் நடக்கின்றன. குறிப்பாக பேருந்துகளில் படிக்கட்டுகளில் நிற்கக்கூடாது என்று சட்டமே உள்ளது.ஏனென்றால் தவறி கீழே விழுந்தால் உயிர் போகும் அபாயம் ஏற்படும்.அந்தவகையில் சேலம் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கை தரும் விதமாக உள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து சேலம் வழியாக தெலுங்கானா செல்வதற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.அந்த சிறப்பு ரயில் சேலம் வந்தடைந்தது. அப்பொழுது அந்த ரயில் ஐந்தாவது பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்தது. சிறப்பு ரயிலில் வந்த பெண்மணி ஒருவர் எஸ் 5 பெட்டியின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்துள்ளார். அவ்வாறு நின்று கொண்டிருந்த வேளையில் கால் தவறி கீழே விழுந்தார்.அந்தப்பெண்மணி பிளாட்பாரத்திற்கும் ரயிலியிற்கும் இடையே சிக்கிக் கொண்டார். இவர் விழுந்த உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் இவர் மீது ரயில் ஏறியது. இவர் மீது ரயில் ஏறியதால் சம்பவ இடத்திலேயே அப்பெண்மணி உயிரிழந்தார்.
அவ்விடத்தில் இருந்தால் மக்கள் அனைவரும் அதனைக் கண்டு கூச்சலிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு ரயில் காவல்துறையினர் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்றுவரை இப்பெண்மணி எந்த ஊரை சேர்ந்தவர் என்று எந்த விவரமும் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுபோல் விபத்துக்கள் ரயில் நிலையங்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்பவருக்கு நடந்து கொண்டே தான் உள்ளது.அரசாங்கம் இதற்கு பல்வேறு தடை விதித்தும் இன்றளவும் சரியான நடைமுறைக்கு ஏதும் வரவில்லை.