தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்! கலைக்கப்படுகிறதா திமுக அரசு?

0
105

கடந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியதால்
ஆட்சியில் அமர்ந்தது. திமுக ஆட்சியில் வெடிகுண்டு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சம்பவங்களிலிருந்து ஒன்று நன்றாகவே தெரிகிறது. அதாவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356 வது பிரிவை நோக்கி திமுக அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகவே புரிகிறது.

இதுவரையில் தமிழகத்தில் தலை தூக்காத ஆர்எஸ்எஸ் அமைப்பும், காலூன்றவே முடியாது என்று நினைத்த பாஜகவும் சமீப காலமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.

தமிழகம் என்று எடுத்துக் கொண்டால் எப்போதும் பாஜகவிற்கும், ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் எதிரான நிலைப்பாட்டையை கொண்டிருந்தது. ஆனால் சமீப காலமாக அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

இந்த நிலையில் தான் சமீபத்தில் கோவை உள்ளிட்ட பல நகரங்களில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகள் இல்லங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் இதே நிலை நீடித்தால் மிக விரைவில் திமுக ஆட்சி களைக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஒருபுறம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இது போன்ற பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரங்களை தமிழகத்தில் புகுத்தி தமிழகத்தில் அரசியல் குழப்பங்களை உண்டாக்கி அதன் மூலமாக ஆட்சியை கலைப்பதற்கு பாஜக முயற்சி செய்கிறது என்று தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது, இதே போல பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சீண்டும் வேலையை தமிழகத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து செய்து வந்தால் தமிழகத்தில் ஆட்சி கலைப்பு நடைபெறுவது நிச்சயம் என்கிறார்கள்.

ஆனால் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரையிலும் உண்மை வெளியாகவில்லை. ஒருபுறம் காவல்துறையின் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மறுபுறம் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது.