டோலோ 650 நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை, முறைகேடாக நடத்திய சில ஆவணங்கள் சிக்கின !!
கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையகமாக கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் காய்ச்சலுக்காக நிவாரணி மாத்திரைகளை தயார் செய்து வருகிறது.இந்நிலையில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் எதிரொலியாக பெங்களூருவில் உள்ள டோலு 650 மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் நேற்று வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இந்நிறுவனம் உண்மையான வருமான விவரங்களை வேண்டுமென்று தவறாக சித்தரித்து பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளது. பிற நிறுவனத்துடன் முறை சாரா பொருளாதாரத்துடன் தொடர்பு கொண்டு வந்திருக்கின்றது. இந்நிலையில் ரேஸ் கோர்ஸ் ரோடு மாதவன் நகரில் உள்ள மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சோதனை நடத்தி வந்தனர்.
இந்த சோதனையில் அந்த நிறுவனத்தில் இருந்து சில ஆவணங்கள் சிக்கியதாகவும் மற்றும் முறைகேடாக சில நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு உள்ளதாகவும் கண்டறியப்பட்டது. இதனை வருமானவரித்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தமிழ்நாடு,மும்பை, டெல்லி, சிக்கிம், கோவா போன்ற பல நாடு முழுவதும் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் டோலோ 650 மாத்திரை நிறுவனத்தில் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. இச்சோதனை நாளையும் நீடிக்கலாம் என கூறப்படுகிறது.