Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய ரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய சேவை! அடடே இதுல இவ்வளவு வசதிகள் இருக்கா..?

#image_title

இந்திய ரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய சேவை! அடடே இதுல இவ்வளவு வசதிகள் இருக்கா..?

இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகபடுத்தி இருக்கும் வந்தே பாரத் ரயிலுக்கு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் தற்பொழுது 50 வழித்தடங்களில் இயங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவுபடுத்த இந்திய ரயில்வே தீவிரமாக முயற்சித்து வருகிறது.

தற்பொழுது தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வரும் இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, பயோ டாய்லெட் என வசதிகள் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் வகையில் “யாத்ரி சேவா அனுபந்த்” என்ற சேவையை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்த இருக்கின்றது.

“யாத்ரி சேவா அனுபந்த்” சேவை:

இந்த திட்டத்தை முதலில் சென்னை – கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த யாத்ரி சேவா அனுபந்த் சேவை என்றால் என்ன? இதனால் பயணிகளுக்கு என்ன பயன்கள் கிடைக்கும்?

*ரயில் நிலைய பிளாட்பார்மில் பயணிகள் உடைமைகளை எடுத்துச் செல்ல வீல்சேர் வசதிகள் கொண்டுவரப்பட இருக்கிறது.

*கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கும் பயணிகளை திருப்திபடுத்தும் விதமாக பிரத்யேக உணவு மெனு வழங்கப்பட்டு ஒவ்வொரு உணவும் சரியான் முறையில் பேக் செய்யப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும்.

*அனைத்து வித உணவு பேக்கிலும் க்யூ-ஆர் கோடு தவறாமல் இடம்பெற்றிற்கும். இதன் மூலம் உணவின் தரம் குறித்து பயணிகள் தகவல் தெரிவிக்க முடியும். வழங்கப்படும் உணவில் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி இடம் பெறாது.

*பயணிகள் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கும் விதமாக பொழுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

*ரயிலின் தூய்மையை உறுதி செய்ய ஒப்பந்ததாரர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

சென்னை – கோவை வந்தே பார்த் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடர்ந்து சென்னை – மைசூர், சென்னை – திருநெல்வேலி, சென்னை – விஜயவாடா உள்ளிட்ட வந்தே பார்த் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Exit mobile version