Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாரடோனா கையெழுத்திட்ட கைக்கடிகாரத்தை திருடிய இந்தியர்!

The Indian who stole the watch signed by Maradona!

The Indian who stole the watch signed by Maradona!

மாரடோனா கையெழுத்திட்ட கைக்கடிகாரத்தை திருடிய இந்தியர்!

கால்பந்து போட்டிகளில் ஜாம்பவானான திகழ்ந்த டேய்கோ மாரடோனாவிற்கு சொந்தமான பாரம்பரிய கைக்கடிகாரம் ஒன்று துபாயில் உள்ள விற்பனை நிலையத்தில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருடு போய்விட்டது. அதில் சிறப்பு வீரரான மரடோனாவின் கையெழுத்து இருப்பதாகவும், அதனால் சிறப்பு வாய்ந்த கடிகாரம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த கடிகாரத்தை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.

இந்நிலையில் அந்த கைக்கடிகாரம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையின் போது, அதை இந்தியாவில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாசித் ஹூசைன் என்ற நபர் திருடிச் சென்றதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார் என்றும், இவர் கடிகாரத்தை திருடிக்கொண்டு கையோடு இந்தியாவிற்கு தப்பி ஓடிவிட்டதாகவும் துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய புலனாய்வுத் துறை மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், அசாம் மாநிலம் சிவசாகர் பகுதியை சேர்ந்த வாசிம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/himantabiswa/status/1469519162938519552/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1469519162938519552%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2F2021%2F12%2F11150022%2FThe-man-who-stole-Maradonas-heritage-watch-has-been.vpf

Exit mobile version