அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! ஒப்பந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள்!

0
212
The information released by Ma.Subramanian! Contract nurses will not be fired!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! ஒப்பந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள்!

கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகளவில் இருந்தது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மக்கள் அதிகளவு வெளியே செல்வதினால் தான் தொற்று வைரஸ் வேகமாக படையெடுத்து வருகின்றது என போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை  அதிகரித்து வந்தது.

அதனால் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் முறையாக சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் அனைத்து மருத்துவமனைகளிலும் நர்சுகள் நியமிக்கப்பட்டனர்.சுமார் 2 ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட நர்சுகள் ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நியமிக்கப்பட்டனர்.கடந்த வாரம் தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட நர்சுகளின் பணிக்காலம் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.அதனை தொடர்ந்து எம்.ஆர்.பி செவிலியர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில் ஒப்பந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள். ஆனால் அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்பு குறைவு. இருப்பினும் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் ஆகிய இடங்களில் மாற்றுப்பணி வழங்கப்படும்.

மேலும் அவர்களுக்கு மாதம் ரூ 18 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.மருத்துவ துறையில் 2,200 காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் நர்சுகளை பணிநீக்கம் செய்வது என்பது அரசின் நோக்கம் இல்லை என கூறியுள்ளார்.