Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் கதகளி ஆடும் கருணாஸ் குழப்பத்தில் அதிமுக !

சசிகலாவை நான் சந்திப்பதற்கான அழைப்பு நிச்சயமாக வரும் அவரை உறுதியாக சந்திப்பேன் என்று நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான திருவாடானை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார்.

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பாக தேசிய தெய்வீக பிரச்சாரத்தை உருவாக்கிய அந்த அமைப்பின் தலைவர் கருணாஸ் சட்டசபை உறுப்பினர் சூலூர், பள்ளபாளையம், சிந்தாமணிபுதூர், போன்ற இடங்களில் ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த அவர் 1994ஆம் வருடம் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில், எங்களுடைய எல்லா பிரிவுகளையும் இணைத்து தேவரினம் என்று அரசாணை வெளியிட்டார். அந்த அரசாணையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

ஒரு சில சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு ,மற்றும் கல்வியில், தனி இட ஒதுக்கீடு தருவது மற்ற சமூக மக்களை அழிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது வெளியிட்ட அரசாணையை தற்போது செயல்படுத்தி 25 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்திட வேண்டும் என்று நடிகர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல சசிகலா தற்போது மருத்துவமனையில் இருந்து வருகிறார், அவர் சென்னை திரும்பியவுடன் சிறிது காலம் ஓய்வில் இருப்பார் முதலில் அவர்களுடைய உறவினர்கள், அனைவரும் அவரை சந்திக்க இருக்கிறார்கள். எங்களுக்கும் அழைப்பு வரும் அவரை நிச்சயமாக சந்திப்பேன் ஜெயலலிதாதான் எங்களுக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்தார். ஆனாலும் இப்போதைய எங்களுடைய கூட்டணி அதிமுகவுடன் தான் என்று தெரிவித்தார் .முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் எங்களை அழைத்து பேசவில்லை என்று தெரிவித்தார் கருணாஸ்.

Exit mobile version