இரண்டு மாதமாக நடைபெற்ற ஐபிஎல் தொடர்! 1 கோடியே 20 லட்சம் பிரியாணிகள் விற்பனை செய்த ஸ்விக்கி!!

0
236
#image_title

இரண்டு மாதமாக நடைபெற்ற ஐபிஎல் தொடர்! 1 கோடியே 20 லட்சம் பிரியாணிகள் விற்பனை செய்த ஸ்விக்கி!

இரண்டு மாதங்களாக நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பொழுது 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமாக பிரியாணிகள் விற்பனை செய்யப்பட்டதாக உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 5வது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இரண்டு மாதங்களாக நடைபெற்ற ஐபிஎல் தொடரை டிவி, செல்போன், இணையதளம் வாயிலாக ரசிகர்கள் பலரும் கண்டு களித்தனர்.

அதே சமயம் ரசிகர்கள் பல்வேறு உணவு பொருள்களை இணையதளம் வாயிலாக ஆர்டர் செய்து வாங்கி உண்டு ஐபிஎல் போட்டிகளை கண்டு ரசித்தனர். அதிக ரசிகர்கள் பிரியாணியை ஆர்டர் செய்து அத்துடன் சில உணவு பொருட்களையும் ஆர்டர் செய்து வாங்கி உண்டு ஐபிஎல் போட்டிகளை திருவிழா போல கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்ட தகவல் வைரலாகி வருகிறது.

ஸ்விக்கி நிறுவனம் பதிவிட்ட டுவிட்டர் பதிவில் ஐபிஎல் ஒட்டு மொத்த சீசனில் மட்டும் 1 கோடியே 20 லட்சத்துக்கும் மேலாக  பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது ஐபிஎல் தொடரின் பொழுது நிமிடத்துக்கு 212 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் ஒரு சைவ பிரியாணிக்கு சமமாக 20 அசைவ பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலமாக ஸ்விக்கி நிறுவனத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீசனில் ஒருவர் ஆர்டர் செய்யப்பட்ட உணவை ஸ்விக்கி நிறுவனம் 77 வினாடிகளுக்குள் வினியோகம் செய்துள்ளது. மேலும் நகரங்களை பொறுத்தவரை பெங்களூரூவில் தான் அதிகம் ஆர்டர்கள் வந்துள்ளது.

பிரியாணி மட்டுமில்லாமல் சமோஷா, ஜிலேபி, ஷாக்கர், தாகி போன்ற பல வகையான உணவுகளை விற்பனை செய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 3641 யூனிட் தாகி மற்றும் 720 யூனிட் ஷாக்கர் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த ரசிகர் ஒருவர் 701 சமோஷாக்களை ஆர்டர் செய்துள்ளார். இது இந்த சீசனில் தனிநபர் ஒருவர் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பட்டியலில் வந்துள்ளது.மேலும் ஸ்விக்கியின் உணவு டெலிவிரி செய்பவர்கள் 33 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.