அனைவரும் கைத்தட்டி சந்திசிரிக்கும் நிலைமைக்கு வந்த பாஜக விவகாரம்!! அண்ணாமலையின் நடவடிக்கை என்ன??
தற்போதைய திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவராக தயா சங்கர் உள்ளார். அதே மாவட்ட பொறுப்பாளராக முன்பு சுபாஷ் சந்திரபோஸ் இருந்தார். சுபாஷ் சந்திர போஸ் முன்னாள் மாவட்ட பாஜக அமைப்பு சாரா துணை தலைவராக இருந்த பொழுது இவரும் தற்பொழுது மாவட்ட பாஜக தலைவராக இருந்த தயாசங்கரும் நெருங்கிய நண்பர்கள். நண்பர்களாக இருந்த பொழுது தயாசங்கர், தொழில் செய்யலாம் என்று கூறி சுபாஷிடம் பல லட்சம் வாங்கியுள்ளார். தொழில் ஆரம்பிக்க முடியாத நிலையில் முன்னாள் பொறுப்பாளராக இருந்த சுபாஷ் சந்திர போஸ் கொடுத்த பணத்தை கேட்டபோது கொடுக்காததால்,இந்த விவகாரம் அனைவரும் பார்த்து சந்தி சிரிக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது.
அந்த வகையில் திருநெல்வேலி முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கவனத்தை ஈர்க்கும் படி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, தற்பொழுது திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவராக உள்ள தயா சங்கர், மணல் குவாரி தொழில் செய்யலாம் எனக் கூறி 40 லட்சம் பணம் கேட்டார். ஆனால் நான், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறினேன். பிறகு எனது தங்கையின் கணவரோட பேசிப் பார்க்கலாம். அவர் பணம் கொடுக்க சம்மதித்தால் அவரையும் இந்த தொழிலில் பிசினஸ் பார்ட்னராக சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறினேன்.
அதேபோல என் தங்கையின் கணவரிடம் இருந்து 40 லட்சம் வாங்கி தயாசங்கரிடம் கொடுத்தேன். நாளடைவில் இந்த தொழில் ஒத்து வராது என்று எண்ணி நாங்கள் இதனை தொடங்கவில்லை. நான், தான் கொடுத்த 40 லட்சம் ரூபாயை பலமுறை தயாசங்கரிடம் கேட்டேன். அவ்வாறு கேட்டதில், முதலில் பதினைந்து லட்சம் மட்டுமே தந்தார். மீதி பணத்தை இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று காலதாமதம் செய்து கொண்டே இருந்தார். நாளடைவில் என்னால் பணத்தை தர இயலாது நீ யாரிடம் வேண்டுமானாலும் போய் முறையிடு… எனக்கு டெல்லி வரையிலும் ஆள் பலம் உள்ளது என என்னை மிரட்டினார்.
நேர்மையாக செயல்படும் பாஜக கட்சிக்குள் இவ்வாறான சில நிர்வாகிகள் இருக்கதான் செய்கின்றனர். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த ட்விட்டர் பதிவானது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பார்க்க வேண்டும். இதனை ஷேர் செய்து எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ட்விட்டர் பதிவில் அவர் போட்டுள்ளார். பாஜக கட்சிக்கு உள்ளேயே இத்தனை மோசடி பேரொளிகள் இருப்பது வெட்ட வெளிச்சம் போட்டு தெரிவித்துள்ளனர்.