விஸ்வரூபம் எடுக்கும் சென்னை ரோகிணி திரையரங்கின் விவகாரம்!! பாதிக்கப்பட்ட நபர்களிடம் அமைச்சர் உதயநிதி பேசுவதாக உறுதி!!

0
182
The issue of Chennai Rohini theater that takes Visvarupam!! Minister Udayanidhi is sure to speak to the affected people!!

விஸ்வரூபம் எடுக்கும் சென்னை ரோகிணி திரையரங்கின் விவகாரம்!! பாதிக்கப்பட்ட நபர்களிடம் அமைச்சர் உதயநிதி பேசுவதாக உறுதி!!

கடந்த வியாழக்கிழமை நடிகர் சிம்பு நடிப்பில் தமிழக திரையரங்குகளில் வெளியான பத்து தல திரைப்படத்தை பார்ப்பதற்கு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பத்து பேர் வந்திருந்தனர், அவர்களிடம் படம் பார்ப்பதற்கு உரிய அனுமதி சீட்டு இருந்தும் தியேட்டர் ஊழியர் அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்துள்ளார். மேலும் இந்த விவகாரம் பத்திரிகையாளர் ஒருவரால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

இந்த காட்சிகளை பார்த்த பலரும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர், இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து திரையரங்கு நிர்வாகம் காரணம் கூறியபோதும், மனித உரிமைகள் ஆணைய தலைவர் மகேஸ்வரன் தலைமையில் நேற்று விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட நரிக்குறவ மக்கள் நான்கு பேர் கலந்து கொண்டனர்.

மேலும் திரையரங்கின் உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, நேற்று சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, தன் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டதாகவும் இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை நடைபெற்றது என்றும், பாதிக்கப்பட்ட நரிகுரவ மக்களிடம் விரைவில் பேச உள்ளதாகவும், நிச்சயமாக இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது என கூறினார்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து தமிழக அமைச்சர் ஒருவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பேன் என கூறியது, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு அரசு ஆதரவாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமாக உள்ளது.