Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட்!!

#image_title

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட்.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் ஐந்து வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது, மேலும் சுட்டு கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் வனவாசி பகுதியை சேர்ந்த கமலேஷ் என்பதும், மற்றொருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் குமார் என்பதும் ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பயங்கரவாத தாக்குதல் ஏதும் இல்லை என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் கூறிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் செய்தியில், பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களான சேலம் கமலேஷ், தேனி மாவட்டம் லோகேஷ் குமார் ஆகியோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன்.

அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவர்களோடு வீர மரணம் அடைந்த மற்ற ராணுவ வீரர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன். வீரவணக்கம். என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பதிண்டா ராணுவ முகாமில் நடந்த தாக்குதலுக்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ராணுவ அதிகாரிகளே கூறிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர் என்று கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Exit mobile version