ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்து, அதன் பின்பு ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்ததாக தெரிவித்துக் கொள்ளும் அளவிற்கு இருந்து, அதன் பின்னர் தமிழக தலைமைச் செயலாளராக உருவெடுத்தவர் ராம மோகன் ராவ். ஜெயலலிதா மறைந்த அன்று மணல் அதிபர் சேகர் ரெட்டியுடன் உரையாடியது குறித்து, ஆதாரங்களுடன் சிக்கி பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ராம மோகன் ராவ்.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, தலைமைச் செயலகத்திற்கு வருமான வரித்துறை சோதனை செய்யும் அளவிற்கு கொண்டு வந்தவர் இந்த ராம மோகன்ராவ் என்ற விமர்சனங்களும் எழுந்தது. மாநிலத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக தலைமைச் செயலாளராக இருந்த ஒருவர் ஊழல் புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்டது , மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது.
ஆந்திர மாநிலத்தில் இருக்கின்ற பிரகாசம் மாவட்டத்தை சார்ந்த ராமமோகன் ராவ் தமிழ்நாட்டில் இருக்கின்ற தெலுங்கு மக்களை ஒன்று சேர்த்து மக்கள் இயக்கம் உருவாக்கப் போவதாக தெரிவித்து வந்தார். கடந்த வருடம் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜனதா கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலே, மதுரையில் நடைபெற்ற இந்து ஜனநாயக முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜெயலலிதாவின் மறைவு சேகர் ரெட்டியுடன் பேசிய விவகாரம், சட்டசபைக்குள் ராணுவம் வந்தது தொடர்பான கேள்விகளுக்கு, பதில் தெரிவிக்க மறுத்துவிட்டார். அப்போது, சுயசரிதை எழுதுவீர்களா? என்ற கேள்விக்கு மட்டும் பதில் கூறிய அவர் நான் சுயசரிதை எழுதினால், சில உண்மைகள் வெளியே வரும் அதன் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிவித்தார்.