கங்காரு வடிவமிட்டுப் பயணத்தை முடித்த விமானம்

0
110

ஆஸ்திரேலிய விமான நிறுவனமான Qantas அதன் போயிங் 747 ரக விமானத்தின் கடைசிப் பயணத்தைச் சென்ற வாரம் புதன்கிழமையன்று இனிதே நடத்தி முடித்தது. நிறுவனத்தின் சின்னமாகிய கங்காரு வடிவத்தை ஆகாயத்தில் அமைத்தவாறு பறந்தது அந்த விமானம். அந்த அதிசய சாகசத்தைக் காண மக்கள் சிட்னி விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். கொரோனா கிருமிப்பரவலால் விமானச் சேவைகளுக்கான தேவை குறைந்துள்ளது. அதனால், Qantas நிறுவனத்தின் 747 ரக விமானங்கள் திட்டமிட்டதற்கு 6 மாதம் முன்னதாகவே ஓய்வுபெற்றுள்ளன.

இரண்டாம் எலிசபெத் அரசியார் உட்பட 250 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளுக்குப் சேவை வழங்கிய Qantas 747 ரக விமானங்கள் 1984லிருந்து செயல்பட்டு வந்துள்ளன. கடைசிப் பயணங்களை முடித்து ஓய்வுபெற்ற விமானங்கள், வறண்ட பருவநிலையைக் கொண்ட அமெரிக்காவின் மொஹாவி பாலைவனத்தில் நிறுத்திவைக்கப்படும்.