பெண்களுக்கு அனுமதி வழங்கிய கேரள அரசு! உற்சாகத்தில் பக்தர்கள்!

0
141
The Kerala government gave permission to women! Devotees in excitement!

பெண்களுக்கு அனுமதி வழங்கிய கேரள அரசு! உற்சாகத்தில் பக்தர்கள்!

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை மாதம் தொடங்கப்பட்டதில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து செல்வார்கள்.இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளில் ஒன்று 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மாலை அணிந்து வரவும் ,சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதி இல்லை.

இதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனைத்து வயது கொண்ட பெண்களும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதுஅதனையடுத்து கோவில் நடை திறக்கப்பட்ட பின்னர் பெண்கள் பலர் சபரிமலைக்கு செல்வதற்கு முயற்சி செய்தனர்.ஆனால் பக்தர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்தனர் அதனால் அவர்கள் கோவிலுக்கு செல்ல வில்லை.

அதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை அதனால் எந்த ஒரு உத்தரவும் அமல்படுத்தாமல் இருந்தது.இந்நிலையில் நேற்று மாலை சபரிமலை நடை திறக்கபட்டதுனால் பக்தர்கள் மாலை அணிய தொடங்கிவிட்டனர்.இந்நிலையில் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.