Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தி கேரளா ஸ்டோரி- திரையரங்கை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது!

#image_title

தி கேரளா ஸ்டோரி- திரையரங்கை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது.

கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட மாலை முற்றுகையிட முயன்ற போது எஸ்டிபிஐ கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஹிந்தி மொழியில் இன்று திரையிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புரூக்பாண்ட் சாலையில் உள்ள புரூக்பீல்ட்ஸ் மாலில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்டிபிஐ கட்சியினர் மாவட்ட செயலாளர் உசேன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புரூக்பாண்ட் சாலை சிக்னல் அருகே முற்றுகையில் ஈடுபட முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக இப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டம் காரணமாக புரூக்பில்ட்ஸ் மால் முன்பாக பரபரப்பான சூழல் நிலவியது.

Exit mobile version