Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடுமையான ஊழல் புகார்களால் நாட்டைவிட்டே ஓடிய மன்னர்: மக்கள் பேரதிர்ச்சி!

ஊழல் செய்தார் என கடுமையான குற்றச்சாட்டுக்கள், புகார்கள் எழுந்ததால், மன்னர் நாட்டைவிட்டே வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

ஸ்பெயின் நாட்டின் முன்னாள் மன்னரான யுவான் மீது கார்லோஸ் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது, இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

ஸ்பெயின் நாட்டில் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் யுவான் கார்லோஸ் அங்கு மக்கள் செல்வாக்கு மிக்கவர். மக்களின் நன்மதிப்பை பெற்றவராவார். இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா என்று மக்களிடையே பல்வேறு வகையான கருத்துக்கள் எழுந்துள்ளன.

 

அதிவிரைவு ரயில் திட்டம், லஞ்ச லாவண்யம் போன்ற ஊழல் குற்றங்கள் புரிந்ததாக, 80 வயதான ஸ்பெயின் நாட்டு மன்னர் யுவான் கார்லோஸ் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

 

இதனால் அந்த நாட்டில் மன்னர் மாளிகையிலிருந்து வெளியிட்ட செய்தியானது, ஜுவான் கார்லோஸின் மகன் பிலிப்பிற்கு எழுதிய கடிதத்தில், அவர் தான் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிலிப்பும் தனது தந்தையின் செயலை பாராட்டியுள்ளார்.

 

 

ஸ்பெயின் நாட்டின் ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோ 1975-ல் மரணமடைந்த போது ஆட்சியைப் பிடித்த யுவான் கார்லோஸ் ஆட்சியில், எதேச்சதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு அரசியல் பாதையை வழிவகுத்தார். ஆனால் இவரின் மீது எழுந்த தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகளால் இவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலைமையில் அவர் லிஸ்பனில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்கியிருப்பதாக போர்த்துகீசிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

 

அதிவேக ரயில் தொடங்குவது குறித்தான ஒப்பந்தத்தில் சவூதி மன்னரிடம் இருந்து 100 மில்லியன் டாலரை பெற்றதாக கடந்த மார்ச் மாதத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. அதன்பிறகு அவரின் மீது தொடர்ந்து லஞ்சம் மற்றும் ஊழல் புகார்கள் வைக்கப்பட்டன. லஞ்சமாக பெற்ற பணத்தினை தனது முன்னாள் காதலிக்கு அனுப்பியதாகவும் ஸ்பானிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

 

இதனடிப்படையில், இத்தாலியின் துணை பிரதமரான, பாப்லோ இக்லியஸ் கூறியதாவது, புகார்கள் எழும் போது அதனை எதிர்கொண்டு குற்றம் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். யுவன் கார்லோஸ் நாட்டை விட்டு ஓடுவது சரியில்லை, அவர் ஸ்பெயினிலேயே தங்கியிருக்க வேண்டும் நாட்டை விட்டு ஓடுவது ஒரு மன்னருக்கு அழகல்ல என அவரைச் சாடியுள்ளார்.

 

 

 

 

Exit mobile version