மடிக்கணினி வழங்கும் திட்டம்! முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்!
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில் பல புதிய அம்சங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கி உள்ளார். இந்த வருடம் ரூ 10 ஆயிரத்து 696 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் மத்திய அரசு 1729 கோடி வழங்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசு கடன் தொகையாக 500 கோடி தரலாம் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அத்தோடு வெளியில் கடன் பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ரூ 1889 கோடி வரை கடன் பெற வாய்ப்புள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் கல்வித்துறைக்கென ரூ 802 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதனால் வரும் காலங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என கூறினார். அதேபோல 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்படும் என தெரிவித்தார்.அதுமட்டுமின்றி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.