கூட்டணி கட்சிகள் போடும் எண்டு கார்டு!! ஒட்டுமொத்தமாக சாயும் திமுக.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!!  

0
612
The last card of the alliance parties!! As a whole, DMK is falling.

 

கூட்டணி கட்சிகள் போடும் எண்டு கார்டு!! ஒட்டுமொத்தமாக சாயும் திமுக.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!!

திமுகவிற்கு கடந்த ஒரு வருடமாகவே போதாத காலமாக உள்ளது. ஒரு பிரச்சனை முடிவடைவதற்குள் மற்றொன்று தயாராக உள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கேடு என ஆரம்பித்து தற்பொழுது நிர்வாகம் நடத்த தகுதி இல்லாதவர் என்று பலரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்த திமுக ஆட்சியானது மக்களுக்கு பல துயரமான நினைவுகளை ஆழமாக பதிய வைத்துள்ளது. அந்த வகையில் சமீபத்திலிருக்கும் கள்ளக்குறிச்சி கள்ளச்சார விவகாரம் தான் மற்ற அனைத்திற்கும் முன்னோடி.

குறைந்த சில தினங்களிலேயே 65க்கும் மேற்பட்ட உயிர்களை இழக்க நேரிட்டது. இதனை கண்டு கொள்ளாமல் இருந்த அரசுதான் முக்கிய குற்றவாளி என மக்கள் கூற ஆரம்பித்து விட்டனர். மேற்கொண்டு திமுக-விற்கு பாதகமாக அமைவது அதிமுக நாம் தமிழர் மற்றும் விஜய்யின் கூட்டணி என்று கூறலாம். புதியதாக அரசியல் களத்தில் கால் பதித்துள்ள விஜய், இளைஞர்களின் செல்வாக்கை பெருமளவில் பெற்றுள்ளார். குறிப்பாக ஆரம்ப கட்டத்திலிருந்து ஆளும் கட்சியை எதிர்ப்பதில் குறியாக உள்ளார்.

அதேசமயம் மத்திய அரசையும் எதிர்த்து வருகிறார். இவரது நிலைப்பாடானது பொதுப்படையாகவே உள்ளது. இவரின் அரசியல் வியூகம் அதிமுக நாதக என்று வரும் பட்சத்தில் இது திமுகவிற்கு வாக்கு சதவீதத்தில் பெரும் அடியை கொடுக்கும். மூன்றாவதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தற்பொழுது ருத்ர தாண்டவம் எடுத்து ஆடுகிறது. ஒரு கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இந்த ஆட்சியில் இருக்கப் போகிறது என மக்கள் சரமாரி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மேற்கொண்டு கொலை வழக்கு கள்ளச்சாராய உயிரிழப்பு என எது நடந்தாலும் அதனை சரி கட்ட நிர்வாகத்தில் இருக்கும் தலைமைகளை மட்டுமே ஆளும் கட்சி மாற்றி வருகிறது. இதனை கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் தாங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் எதிர்க்கட்சி என பலரும் கொந்தளிப்பில் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சொந்தக் கட்சி குள்ளேயே உட்க்கட்சி மோதலானது தீவிரம் காட்டி வருகிறது.

குறிப்பாக டிசம்பர் மாதம் சட்டப்பேரவையில் திமுக கவுன்சிலர்கள் பலர் மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றினர். தொகுதிகளில் செய்ய வேண்டிய வேலைகளுக்கு அனுமதி அளிக்காமல் இடையூறு கொடுப்பதாக திமுக கவுன்சிலர்கள் மேயர் மீது புகார் கொடுத்தனர். மேற்கொண்டு தீர்மானம் நிராகரிப்பட்டது. இவ்வாறன செயல்களால் தலைமை மற்றும் கவுன்சிலர்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

இதனையெல்லாம் விட தனது தோழமைக் கட்சி எனப்படும் திருமா தமிழக அரசுக்கு எதிராக பல கண்டனங்களை கூறி வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முறையற்ற பாதுகாப்பு என தொடங்கி குற்றவாளிகள் வரை பல குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதுவும் இவர்களின் கூட்டமைக் கட்சிக்கு விரிசலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விரைவிலேயே திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி முறிய கூடும் என பலரும் கூறி வருகின்றனர். மேலும் கூட்டணியில் இருக்கும் காங்கிரசும் தனித்து நிற்க வேண்டும் என்று அவ்வபோது மேடைகளில் கூறி வருவதும் இதற்கு பெரும் அடியாக இருக்கும். மீண்டும் ஆட்சியில் அமர முடியாத சூழலில் தான் திமுகவின் செயல்முறைகள் தற்சமயம் உள்ளது.