இதை விண்ணப்பிக்க நவம்பர் 10ஆம் தேதியே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு!
தற்பொழுது தான் கொரோனா தொற்று இரண்டாம் அலை முடிவுக்கு வந்தது.அதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த மதிப்பெண்கள் வெளிவந்தது.முதலில் பாலிடெக்னிக் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதனை அடுத்து பொறியியல் படிப்பில் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதனை அடுத்து தற்பொழுது மருத்துவம் சார்ந்த 19 வகையான துணை படிப்புகள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேதியை வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் ,பி பார்ம் ,ரேடியோகிராபி என மருத்துவம் சார்ந்த 19 வகையான துணை படிப்புகள் உள்ளது. இப் படிப்புகளுக்கு பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி படிப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு இன்று முதல் இணையத்தில் பதிவு தொடங்கியுள்ளது.இந்த பதிவை http:/tnhealth.tngov.in மற்றும் http:/tnmedicalselection.org என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இன்று காலை 10 மணிக்கு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.
மேலும் இணையத்தில் விண்ணப்பித்த பதிவை டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.மேலும் நவம்பர் 8 ஆம் தேதி மாலை 5 மணியே இது விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகும். அதனையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளர் ,தேர்வு குழு, எண் 162, ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை, கீழ்பாக்கம் சென்னை 600010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இதனை நவம்பர் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏனென்றால் அதுவே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.