கோயமுத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவ சங்க விழாவில் பங்கு பெற்ற தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது, பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாஜகவினர் தங்களுக்கு கோரிக்கை இருந்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் முறையிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில் செயல்படுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டதால் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் கோவையில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதை போல செய்திகள் வருகின்றன, இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார் செந்தில் பாலாஜி.
கோவை மாவட்டத்தில் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காத விதத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் சிகிச்சையின் போது மின்சாரம் தடைபட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அங்கே மின்சாரம் தடை செய்யப்பட்டது 5 நிமிடங்கள் மட்டுமே உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது நாள் முழுவதும் மென்தடை உண்டாவதில்லை என்று தெரிவித்துள்ளார் செந்தில் பாலாஜி.