Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென அதிரடி முடிவை எடுத்த முக்கிய நடிகை! இணையத்தில் வைரலாகும் பதிவு!

பிரபல நடிகை தன்னுடைய பெயரில் இருந்த ஜாதி அடையாளத்தை நீக்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ஜனனி அய்யர் இதையடுத்து அதே கண்கள், போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டதன் மிகவும் பிரபலமாக உருவெடுத்தார்.

இதனையடுத்து அவர் தற்சமயம் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், ஜனனி அய்யர் தன்னுடைய பெயரில் உள்ள ஜாதி அடையாளத்தை நீக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில் மாற்றம் ஒன்றே மாறாதது என்றும் ஒற்றுமையுடன் என்று குறிப்பிட்டு இருக்கின்ற ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தன்னுடைய பெயரை ஜனனி என்று மட்டும் குறிப்பிட்டு இருக்கிறார். அவருடைய இந்த திடீர் முடிவிற்கு காரணம் என்ன என்று அவர் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை. அவர் வெளியிட்டிருக்கும் இந்த பதிவை தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

Exit mobile version