உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று உலக நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரேசில், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற ஜாம்பவானான வளர்ந்த பெரிய பெரிய நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் சரிவை சந்தித்தது என்று அந்த நாட்டின் அதிகாரபூர்வமான பதிவு வெளியாகி உள்ளது.
ஆனால் ரஷ்யா, சீனா, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா போன்ற நாடுகள் மிக விரைவில் பொருளாதாரத்தில் இருந்து மேலும் அளவுக்கு குறைந்த அளவிலேயே சரிவை சந்தித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் அமெரிக்காவின் பொருளாதார சரிவு ஏற்பட்டதால் இல்லையா என்று அந்த நாட்டின் தேசிய பொருளாதார ஆராய்ச்சி மையம் தான் முடிவு செய்யும்.
அந்த நிறுவனம் தற்போது ஜூன் எட்டாம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பின்படி அமெரிக்கா பொருளாதார சரிவு காலத்தை தொடங்கியுள்ளதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
இதேபோன்றே கடந்த 6 மாதங்களாகவே உலக நாடுகள் பலவும் ஜிடிபி வளர்ச்சி அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி கடும் சரிவின் காரணமாக நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியே ஆட்டம் கண்டுள்ளது.
இந்த பொருளாதார நிலைமை சரியாக அதற்கு குறைந்தது இரண்டு வருடங்களாவது பிடிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.