Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாமரையைவீழ்த்த வேண்டும் – பிரச்சாரத்தில் உளறிய டிடிவி தினகரன்!

#image_title

தாமரையைவீழ்த்த வேண்டும் – பிரச்சாரத்தில் உளறிய டிடிவி தினகரன்!

தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் எங்கு பார்த்தாலும், வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று கோவை மாவட்டம் சூலூரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அப்போது அண்ணாமலை பாஜக வேட்பாளர் என்பதை மறந்த டிடிவி தினகரன் தவறுதலாக அவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடனே அங்கிருந்த தொண்டர்கள் தாமரை என்று கூச்சலிட்டனர். அதனை தொடர்ந்து சுதாரித்து கொண்ட டிடிவி தினகரன் நேற்று நான் போட்டியிடும் தேனி தொகுதியில் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.

எனவே அந்த நியாபகத்தில் கேட்டுவிட்டேன். அதனால் என்ன தவறு? குக்கரும், தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள கட்சியின் சின்னங்கள் தான் என்று விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து அவர் செய்த சம்பவம் தான் ஹைலைட்டே. ஒரு நிமிடம் தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு கேட்ட டிடிவி தினகரன், “மோடி நம்பிக்கைக்குரிய அண்ணாமலையை வெற்றி பெற செய்வதன் மூலம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் போல, தீய சக்தியையும், துரோக சக்தியையும் தாமரையை வீழ்த்த நீங்கள் துணை புரிய வேண்டும்” என்று வாய் தவறி உளறி விட்டார். இதனை கேட்ட தொண்டர்கள் அதிர்ந்து விட்டார்கள்.

பின் எப்படியோ நிலைமை அறிந்து சுதாரித்து கொண்ட டிடிவி தினகரன், இந்த தேர்தலில் தாமரை வெற்றி பெற்றது என்ற செய்தி தமிழகம் முழுவதும் பறைசாற்ற செய்ய வேண்டுமென கூறி சமாளித்தார்.

Exit mobile version