இணையத்தில் வைரலாகிய காதல் ஜோடி ஒரே நாளில் பிரேக்கப்! அனைத்திற்கு முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி!

0
235
The love couple that went viral on the internet broke up in one day! Aishwarya Lakshmi put an end to everything!

இணையத்தில் வைரலாகிய காதல் ஜோடி ஒரே நாளில் பிரேக்கப்! அனைத்திற்கு முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி.இவர் தற்போது தமிழ் சினிமாவில் குறைந்த காலகட்டத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார்.இவர் எப்பொழுதும் சிறந்த கதாப்பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகின்றார்.மேலும் இவர் ஒரு சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.இவர் முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ஆஷான் படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதுமட்டுமின்றி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம்,ஆர்யாவுடன் கேப்டன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து சாய் பல்லவியை வைத்து இவர் தயாரித்த படம் தான் கார்கி.குறிப்பாக இதில் இவரே முக்கிய காதபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.மேலும் தமிழ் சினிமாவில் அண்மையில் அதிகளவு வரவேற்பை பெற்ற பொன்னியன் செல்வன் பாகம் 1 ல் பூங்குழலி கதாபாத்திரத்தில் மணிரத்தனம் இயக்கத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பெண்களை கவரும் நோக்கில் கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தை நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் டுவிட்டர் பதிவை ஒன்றை போட்டிருந்தார்.அந்த டுவிட்டர் பதிவில் கைதி,மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்த அர்ஜுன் தாஸ் உடன் இருக்கும் புகைபடத்தின் கீழ் ஹார்டின் போட்ட போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட பலரும் இருவரும் காதலித்து வருவதாக இணையத்தில் செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ஐர்வர்யா லட்சுமி தனது இணையப் பக்கத்தில் முன்னதாக போட்ட போஸ்டருக்கு விளக்கமளித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் நண்பர்களே என்னுடைய கடைசி பதிவு இதுபோல வைரலாகும் என நான் எதிர்பார்க்கவில்லை.நாங்கள் சந்திக்க நேர்ந்தது அதனால் ஒரு புகைபடம் ஒன்றை கிளிக் செய்து பதிவிட்டேன்.நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான்.நேற்று முதல் எனக்கு மெசேஜ் செய்யும் அனைத்து அர்ஜுன் தாஸ் ரசிகர்களுக்கும் அவர் உங்களுடையவர் என பதிவிட்டிருந்தார்.