மலை உச்சியில் தனது காதலை வெளிப்படுத்திய காதலன், நிகழ்ந்த விபரீதம்!

0
143

ஆஸ்திரிய நாட்டின் கரீந்திய நகரில் 27 வயது உடைய வாலிபர் 32 வயது நிரம்பிய பெண்ணை காதலித்து வந்தார். காதலியிடம் தனது காதலை கூற விரும்பிய அந்த வாலிபர் பால்கெர்ட் என்ற மலை உச்சியில் தனது காதலை தன் காதலியிடம் கூற விரும்பி மலை உச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்பு காதலன் தனது மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு 650 அடி மலை உச்சியில் நின்று தன் காதலியிடம் “தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?” என்று கேட்க சம்மதம் தெரிவித்த அந்த பெண் சில நிமிடங்களில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத காதலன் தனது காதலியை காப்பாற்ற முயற்சித்த போது, அவரது முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து மலை உச்சியில் இருந்து கீழே விழுந்த அவர் 50 அடி உயரத்தில் மலைமுகப்பை பிடித்து தொங்கியபடி இருந்துள்ளார்.

இந்நிலையில் குளிர்காலம் என்றாலே அதிக பனி மழை பொழியும் காலங்களாகும். எனவே 650 அடி மலை உச்சியில் இருந்து விழுந்த அப்பெண் சிறிய காயங்களுடன் அடர்ந்த பனி போர்வையில் விழுந்துள்ளார். அந்த நேரத்தில் அவ்வழியே சென்ற ஒரு நபர் அசைவற்றுக் கிடக்கும் அந்த பெண்ணை பார்த்ததும் இலவச அவசர உதவி எண்ணை அழைத்து இந்தப் பெண்ணைப் பற்றிக் கூறியுள்ளார்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் ஹெலிகாப்டர் கொண்டு காதலர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வைத்தார். இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆஸ்திரியாவில் நிகழ்ந்த இச்செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.