Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புத்த பூர்ணிமாவுக்கு பொது விடுமுறை அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி!! சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

#image_title

புத்த பூர்ணிமாவுக்கு பொது விடுமுறை அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி!! சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

கவுதம புத்தரின் பிறந்தநாளை புத்த மதத்தை சேர்ந்தவர்கள் புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். புத்த பூர்ணிமாவுக்கு பொது விடுமுறை அறிவிக்க உத்தரவிடக் கோரி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜ் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், வைகாசி மாதம் பெளர்ணமி அன்று கொண்டாடப்படும் புத்த பூர்ணிமா, இந்த ஆண்டு மே மாதம் 17 ம் தேதி கொண்டாடப்படுகிறது என்றும் இந்தியாவில் புத்த பூர்ணிமா நாளை பொது விடுமுறையாக அறிவிக்க கோரி மத்திய மாநில அரசுகளுக்கு மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது சாத்தியம் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Exit mobile version