Madras High Court: நயன்தாரா- தனுஷ் வழக்கு ஜனவரி மாதம் -8 ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரம் என்ற உயரத்தை அடைந்தவர் நடிகை நயன்தார. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதிகளுக்கு உயர், உலகு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. நடிகை நயன்தாரா தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை தொகுத்து ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ என்ற பெயரில் ஆவணப்படம் தயாரித்து இருந்தார்.
இந்த ஆவணப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ்-இல் வெளியானது. இதற்கு முன்பு அந்த ஆவணப் படத்தின் டிரெய்லர் வெளியானது, அதில் தனுஷ் தயாரித்து வெளியான “நானும் ரவுடி தான்” படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த படப்பிடிப்பின் போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாரவுக்கு காதல் ஏற்பட்டது.
எனவே அந்த படத்தின் காட்சியை ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருந்தார்கள். எனவே “நானும் ரவுடி தான்” படத்தின் காட்சிகளை உரிய அனுமதி பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும் , நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கும் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்தது. மேலும் தனுஷ் அவர்களை நேரில் சந்தித்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கூறினார்கள். இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகின்ற ஜனவரி-8 ஆம் தேதி நடத்தப்படும் என தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.