Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளிக்கு சென்ற குழந்தைகள் மாயம்?பெற்ற தாயின் சூழ்ச்சி?..  

The magic of children who went to school? The trick of the birth mother?..

The magic of children who went to school? The trick of the birth mother?..

பள்ளிக்கு சென்ற குழந்தைகள் மாயம்?பெற்ற தாயின் சூழ்ச்சி?..

 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வக்கனாகுண்டு பகுதியை சேர்ந்தவர்தான் ரத்தினம்.இவரது மனைவி ஜான்சிராணி.இவர்கள் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் நடந்தது.இந்த தம்பதிகளுக்கு முகேஷ் என்ற மகனும் மற்றும் பிருந்தா என்ற மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஜான்சிராணி கணவர் ரத்தினம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.இதனையடுத்து ஜான்சிராணி தற்போது வேறொருவரை திருமணம் செய்துள்ளார்.அவரது குழந்தைகள் இருவரும் ஜான்சிராணிவுடன்  செல்ல மறுத்தனர்.இந்நிலையில் வக்கனாகுண்டில் உள்ள அவர்களது தாத்தா சுப்பையாவீட்டில் தங்கி வந்தார்கள்.

குழந்தைகள் இருவரும் சம்பவத்தன்று தாத்தா வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றார்கள்.சாலையில் நடந்து கொண்டிருந்த குழந்தைகளை திடிரென்று காரில் வந்த மர்ம நபர்கள் இரன்டு பேரையும் கடத்தி சென்றுள்ளனர்.இதுகுறிந்து தகவல்  அறிந்த தாத்தா சுப்பையா காரியாபட்டி காவல் நிலையத்திற்கு சென்று தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.மேலும் குழந்தைகளை கடத்திய மர்ம கும்பலை போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.இந்த விசாரணையில் குழந்தைகளின் அம்மா ஜான்சிராணி ஆள் வைத்து கடத்தப்பட்டாரா?

இல்லை குழந்தைகளின் தாத்தா சுப்பையாவிற்கு விரோதிகள் யாரவது இதை செய்துள்ளாரா?என தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Exit mobile version