மும்பாதேவி கோவில் வளாகத்தினை சீரமைக்க முடிவு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு!!

0
302
#image_title

மும்பாதேவி கோவில் வளாகத்தினை சீரமைக்க முடிவு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு!!

மும்பை மாநகரின் தென் மும்பையிலுள்ள கல்பாதேவி என்னும் பகுதியில் அமைந்துள்ளது 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மும்பாதேவி கோவில். இக்கோவிலானது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மற்றும் கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.இக்கோவிலுக்கு தசரா போன்ற திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இக்கோவிலுக்கு உள்ளே நுழையும் பாதையானது மிக குறுகலாக இருக்கும். இதனால் பக்தர்கள் உள்ளே வந்து வெளியே செல்ல சிரமமாகவுள்ளது.

இதன் காரணமாக பக்தர்கள் வசதியினை கருத்தில் கொண்டு ரூ.220 கோடி செலவில் மும்பாதேவி கோவில் வளாகத்தினை மேம்படுத்த மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 9 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டு இக்கோவில் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது, நடைபாதை வியாபாரிகள் இருக்கின்றனர் என்று தெரிகிறது.

முன்னர் இப்பகுதியில் ஓர் பைதோனி குளம் ஒன்று இருந்துள்ளது. ஆனால் அது தற்போது இல்லை. இந்நிலையில் தற்போது மேற்கொள்ளவுள்ள கோவில் சீரமைப்பு பணிகளின் பொழுது மீண்டும் இந்த குளம் தூர்வார முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் உள்ள கடைகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் யாகம் செய்யும் இடம், முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது. அகற்றப்படும் கடைகளுக்கு கோவிலுக்கு அருகேயுள்ள இடத்திலேயே மாற்று இடம் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கழிவறைகள், இருக்கைகள், நடைபாதை, ஓய்வெடுக்கும் இடம், உள்ளிட்ட வசதிகளும் செய்யப்படவுள்ளது. மொத்தத்தில் இக்கோவில் வளாகத்தில் ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் சீரமைப்பு பணிகள் நடக்கவுள்ளது. இப்பணிகளுக்கான டெண்டர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.