பிரபல நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார்.
பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதற்காக திருமாவளவனுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் திருமாவளவனின் பெண்களுக்கு எதிரான கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பாக இன்று போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. ஆனாலும் இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர் இருந்தாலும் தடையை மீறி போராட்டத்தில் பங்குபெற நடிகை குஷ்பு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை முட்டுக்காடு அருகே வழிமறித்த காவல்துறையினர் கைது செய்து அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு ஓட்டலில் தங்க வைத்திருக்கிறார்கள் இதனிடையே நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எல் முருகன் நடிகை குஷ்பு கைது செய்யப்பட்ட சம்பவம் சட்டத்திற்கு புறம்பாக நடந்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
அதுபோல பாஜக மகளிரணி சார்பாக போராட்டம் நடத்த திட்டமிடபட்டதற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது கண்டனத்திற்கு உரியதாகும் எனவும், திருமாவளவன் மற்றும் ஸ்டாலினை தமிழக தாய்மார்கள் நடமாட விட மாட்டார்கள் என்று தான் தெரிவித்திருந்தேன் என்று விளக்கம் அளித்து இருக்கின்றார்.