சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை முக்கிய தகவல்…! அதிர்ச்சியில் தமிழக முக்கிய புள்ளி…!

0
164

உசிலம்பட்டி பகுதியில் சசிகலாவிற்கு ஆதரவாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் சுவரொட்டி ஒட்டியதால், பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சசிகலா பேரவை தமிழ்நாட்டில் முதன்முதலாக உதயமானது மதுரை அருகே இருக்கின்ற உசிலம்பட்டியில் தான்.

அப்பேரவையை தொடங்கியவர் வழக்கறிஞர் சேது என்பவர் நெடுங்காலமாக, அதிமுகவில் இந்த அவர் அதன் பின்னர் அமமுக கட்சியில் சேர்ந்தார்.

அதிமுகவில் தனக்கு உரிய மரியாதை இல்லாத காரணத்தால் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தபோது இவரும் திமுகவில் சேர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சென்ற நான்கு ஆண்டுகளாக இருந்து வருகிறார் சசிகலா. அவர் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறார் என்று தகவல் வெளியானது. அதன் அதன்பின்பு ஆகஸ்ட் மாதம் இருபத்தி எட்டாம் தேதி வெளிவருவதாக கூறப்பட்டது.

ஆனால் உண்மையாகவே அவருக்கு நீதிமன்றம் விதித்த அபராதத் தொகை 10 கோடி ரூபாயை அவர் இன்னும் கட்டவில்லையாம், அதை செலுத்தியவுடன் தான் சசிகலா வெளியே வருவது சம்பந்தமாக சிறைத்துறை அறிவிக்கும், என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

இன்னும் ஒரு சில நாட்களில் அவர் விடுதலை ஆகிவிடுவார் என அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவிக்கிறார்.

இந்நிலையில் தான் இதுபோன்ற ஒரு சுவரொட்டி உசிலம்பட்டியில் உலாவ தொடங்கியிருக்கின்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் இருக்கின்ற செக்கானூரணியை வசிப்பிடமாக கொண்ட, காவல்துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒச்சாத்தேவர் என்ற நபர் சசிகலாவிற்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டி இருக்கின்றார்.

அந்த சுவரொட்டியில், திருமதி சசிகலா பாண்டியநாட்டு வாரிசு என்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 17 கிலோ தங்கம் கொடுத்தவர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அவருக்காக தற்கொலை படையாக தயாராக இருக்கின்றோம் எனவும், 2021 ஆம் வருடத்தில் தஞ்சாவூர் அரண்மனை மன்னர் பேரரசியாக பொறுப்பேற்று, தமிழ் இனம் காப்பதற்காக தமிழ்நாட்டின் மக்களை காக்க ஆணையிட வேண்டும் ஒற்றர் படை மற்றும் போர் படை தயார் என்று அச்சிடப்பட்டு இருக்கின்றது உசிலம்பட்டி முழுவதிலும் வட்டமிட்ட இருக்கின்ற இந்த சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது.