மக்களே தவறாக நினைக்காதீர்கள்! ஸ்டாலின் கூறிய முக்கிய காரணம்!

0
154

தர்மபுரி தடங்கம் ஊராட்சி பகுதியிலே உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், தேர்தலின் பொழுது வெற்றியடைந்து ஐந்து வருடங்கள் ஆட்சியில் நீடிப்பது முக்கியம் கிடையாது .எதிர்வரும் 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டமிடலை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தை வளமாக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். அதைப்போன்ற ஆட்சியை தான் கருணாநிதி வழங்கி வந்தார். அதுபோன்ற ஆட்சியை தான் நானும் வழங்க இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

அதோடு மு க ஸ்டாலின் ஆகிய நான் பொறுப்பேற்கிறேன் என்று தொடர்ச்சியாக மக்களாகிய உங்களுக்கு உறுதி வைத்துக் கொண்டிருக்கிறேன். அதில் இங்கே பார்த்துக் கொண்டிருக்கும் பலர் நான் என்று சொல்கிறாரே இந்த நான் என்பதே அகம்பாவத்தின் சொல் என்று நினைத்திருக்கலாம். இது அகம்பாவம் கிடையாது ஒரு பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான உறுதி மொழிக்கான ஒரு உத்தரவாதம் தான் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

தமிழகத்தின் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சுமார் 6 மாதங்களுக்கு முன்பாகவே திமுக தரப்பில் ஒன்றிணைவோம் வா என்ற பிரச்சாரத்தை இணையதளம் மூலமாக தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின். அதேபோல திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் .அதுமட்டுமல்லாமல் திமுகவின் தேர்தல் பணிக் குழுவானது தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அதோடு திமுக நிர்வாகிகள் அனைவரையும் ஓய்வே இல்லாமல் திமுக தலைமையை வேலை வாங்குகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

அந்த அளவிற்கு எதிர் வரும் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது திமுக தரப்பில் காரணம் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையில் சுமார் 10 ஆண்டு காலமாக திமுக ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை அதற்கு காரணம் அதிமுகவில் அதன் பொதுச் செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்துவந்த ஜெயலலிதாவின் வளர்ச்சிதான் என்று சொல்லப்படுகிறது. எவ்வளவுதான் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் கூட கடந்த பத்து வருடங்களாக திமுகவால் ஆட்சிக் கட்டிலை நெருங்க கூட முடியவில்லை. அந்த அளவிற்கு தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி என்பது இருந்தது. இதனால் சற்று கலங்கி தான் போனது திமுக என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனாலும் தற்சமயம் முன்பு அதிமுகவில் இருந்த அந்த மாபெரும் ஆளுமை இப்போது இல்லை. அதனை அடிப்படையாக வைத்து தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டால் நாம் நிச்சயம் ஆட்சியை பிடித்து விடலாம் என்பதே ஸ்டாலின் கணக்காக இருந்து வருவதாக சொல்கிறார்கள். ஆனாலும் ஆளும் தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நாங்கள் அம்மாவின் வழிவந்தவர்கள் நாங்களும் அவருக்கு சளைத்தவர்கள் அல்ல என்று காட்டும் வகையில் அவர்களும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோல ஸ்டாலின் அவர்களும் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பீகார் மாநிலத்தைச் சார்ந்த பிரசாந்த் கிஷோர் அவர்களை தேர்தல் வியூக வகுப்பாளராக முன்னிறுத்தி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது இதற்காக பிரசாந்த் கிஷோர் அவர்களுக்கு சுமார் 700 கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல ஆளும் தரப்பான அதிமுகவையும் சுனில் என்பவரை தேர்தல் வியுக அமைப்பாளராக அமைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இப்படி போட்டி போட்டுக் கொண்டு இரு பெரும் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.