Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த மாவட்டத்தில்  குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பிரதான சாலை!.. ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்த ஊர் பொதுமக்கள்!…

The main road in this district is full of potholes!

The main road in this district is full of potholes!

இந்த மாவட்டத்தில்  குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பிரதான சாலை!.. ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்த ஊர் பொதுமக்கள்!…

கன்னியாகுமாரி மாவட்டத்திலுள்ள  தாழக்குடி முதல் நாக்கால்மடம் செல்லும் சாலை மிகப் பிரதான சாலையாகும். இச்சாலையின் வழியாக தான் அனைத்து பள்ளி குழந்தைகளும் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் செல்கின்றார். இந்த சாலைகளில் பொதுமக்கள் மற்றும்  விவசாய பெருமக்கள் என அனைவரும் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சாலையின் நாச்சீயார் குளத்தின் தடுப்பு சுவர் பாதிக்கப்பட்டு நீர் கசிவு ஏற்படுவதால் தாளக்குடி முதல் நாக்கால்மடம் சாலை பழுதடைந்து பல விபத்துக்கள் ஏற்படுகின்றன.இதனால் ஆங்காங்கே சாலை எங்கும்  மழை நீரால் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த சாலையில் குண்டும் குழியுமாக மாறியது. இதனால் அங்கு பல விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொது மக்கள் அச்சப்படுகிறார்கள்.

இந்த சூழ்நிலை கருத்தில் கொண்டு தாழக்குடி பேரூராட்சி கவுன்சிலருமான ரோகினி ஐயப்பன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தும் அதற்கு தகுந்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆகவே தாழக்குடி ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாய பெருமக்கள் நலன்கருதி சாலையினை நேரடியாக பார்வையிட்டு மிக விரைவில் சாலையினை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதனால் பள்ளி செல்லும் சிறுவர்கள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அனைவரும் அந்தச் சாலையில் தான் செல்வார்கள். எனவே விரைவில் இதனை சரிசெய்து  தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டார்கள்.

Exit mobile version