உள்நாட்டு போரின் முக்கிய கட்டம்! ஆயுத உதவி செய்யும் துருக்கி! குழந்தைகள் உட்பட பலர் பலி!
சிரியாவில் கடந்த 2011 ம் ஆண்டு முதலே உள்நாட்டுப் போர் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. அந்த போரானது தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கியமான இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரியாவின் அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கிளர்ச்சியாளர்களின் குழுக்களின் மீது ரஷ்யா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. துருக்கி நாட்டில் இருந்து கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவிகளை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே சிரியாவின் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு மிகவும் அதிகரித்துள்ளது.
அதன் காரணமாக இரு தரப்பினரும் தாக்குதல்களை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் டமாஸ்கஸில் அரசு படையினர் சென்ற பேருந்தை குறிவைத்து நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த பேருந்தில் சென்ற இராணுவத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 14 சிரியா வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வெடிகுண்டு தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.
அதன் காரணமாக பேருந்து தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரியாவின் பாதுகாப்பு படையினர் நேற்று வான்வழி தாக்குதல் ஒன்றை நடத்தினார்கள். அதில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாநகரில் சிரியா விமானப்படை குண்டுகளை வீசி தாக்குதல் ஒன்றை நடத்தியது.
இந்த வான்வழித் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் எனவும், ஐ. நா வின் குழந்தைகள் கண்காணிப்பு அமைப்பு அதிர்ச்சி தகவலை அறிவித்துள்ளது.