Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விமானியின் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

விமானத்தை இயக்கும் பணி அவ்வளவு எளிதான விசயமல்ல தரையிறங்கும் போது மிகுந்த கவனத்துடன் இறக்க வேண்டும். வேகமாக காற்று அடித்தாலோ அல்லது விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலோ தரையிறங்குவது சிரமம் ஆகும். அந்த  வகையில் பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் விமான நிலையத்திற்கு சமீபத்தில் போயிங் ரக விமானம் ஒன்று வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தை சமாளித்து விமானத்தை ஓடுபாதையில் நேராக தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பக்கவாட்டில் தரையிறக்கினார்.
Exit mobile version