Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மேயராகும் தூய்மை பணியாளர்!

#image_title

மேயராகும் தூய்மை பணியாளர்!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறையிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றன அந்த வரிசையில் தூய்மை பணியாளராக இருந்த பெண் ஒருவர் மேயராக தேர்வாகியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாநகராட்சியில் மேயர் மற்றும் துணை மேயருக்கான பதவிக்காலம் முடிவடைந்தை அடுத்து புதிய மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நடைபெற்றது.

அந்த தேர்தலில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்கினர், தேர்தல் முடிவில் மேயராக பாஜக கட்சியை சார்ந்த சவிதா காம்ப்ளேவும், துணை மேயராக ஆனந்த் சவானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவிதா காம்ப்ளே முன்பு மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

Exit mobile version