கைதியின் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கை வெளியீடு!!!

0
201
#image_title

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது அதில் அவருக்கு ஏழு பற்கள் உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுக்கப்பட்ட சம்பவத்தில் ஏ எஸ் பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பிறகு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் காவல்துறை ஆய்வாளர்கள் நான்கு பேர் உட்பட பலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் கடந்த மார்ச் 10ஆம் தேதி வி கே புரம் பகுதியில் அடிதடி வழக்கில் அருண்குமார் உட்பட சிலரை விசாரணைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

விசாரணையில் அருண்குமார் மற்றும் அவருடைய 17 வயதுடைய சகோதரரும் காவல் நிலையத்தில் ரத்த காயம் ஏற்பட்டதாக அவரது தாயார் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஜாமினில் வெளியே வந்த அருண்குமார் மற்றும் அவரது சகோதரர் பல் சிகிச்சைக்காக காவல்கிணறு பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த 31ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர்.

பல் மருத்துவமனையில் அருண்குமாருக்கு சிகிச்சை கொடுத்த ஆவணங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த ஆவணத்தில் அருண்குமாருக்கு முன்பல் சேதம் ஆகி உள்ளது. மேல் தாடையில் இடது பக்கம் இரண்டாவது பல் மற்றும் கீழ் தாடையில் மூன்று பால்கள் உடைந்துள்ளது.

பற்கள் பல இடங்களில் உடைந்து உள்ளது மொத்தமாக ஏழு பற்கள் அதில் சேதம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணம் வெளியாகியுள்ளது மேலும் பல் உடைப்பு சம்பவத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.