நாளை மாலை கரையை கடப்பதால் சென்னைக்கு பயங்கர எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

0
128
The Meteorological Department has issued a terrible warning to Chennai as it will cross the border tomorrow evening.

நாளை மாலை கரையை கடப்பதால் சென்னைக்கு பயங்கர எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25ஆம் தேதி ஆரம்பித்தது. அதன் காரணமாக சென்னையின் பல இடங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பொழிவு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும் அறிவித்துள்ளனர். இது இன்று காலை 5.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

காலை 8.30 மணி அளவில் இருந்து மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு மணி நேரத்திற்குள் தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது வலுவடைந்த நிலையிலேயே மேற்கில் இருந்து வட மேற்கு திசை நோக்கி நகர்வதாக அறிவியலாளர்கள் சொல்கின்றனர்.

இது இன்று பிற்பகலில் இருந்து தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிக்கு மிக அருகில் வந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளை வட தமிழக கடற்கரையை அடையும். அதை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் அறிவித்துள்ளனர். அதன் காரணமாக நாளை மாலை கடலூர் அருகே, காரைக்கால் – ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்துக்கு ரெட், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என மூன்று வகையான அலெர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும், காரைக்கால் பகுதிகளுக்கும் இன்று அதி பலத்த மழை தரும் என்றும், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் அல்லது மிக பலத்த மழையும் பெய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை முதல் மிக கனமான மழை பொழியும் என்றும் சொல்கின்றனர்.

நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பொழியும் என்றும் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான அளவு மழை பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை வரும் என்று கூறியதோடு ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. அதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரவலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்னும் 3 நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புகள் அதிகம் என்றும், இன்று பலத்த மழை முதல் மிக பலத்த மழை பொழியும் என்றும் தெரிவித்துள்ளனர். நாளை சில பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.