செல்வம் தரும் குபேரர் வழிபாடு செய்யும் முறை மற்றும் விளக்கு ஏற்றும் முறை!!

0
144
#image_title

செல்வம் தரும் குபேரர் வழிபாடு செய்யும் முறை மற்றும் விளக்கு ஏற்றும் முறை!!

குபேரர் வழிபாடு செய்யும் முறை…

குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிட்ட உதவும்.

குபேர பொம்மையை நாமே வாங்குவதை விட வேறு யாராவது வாங்கி கொடுத்தால் நல்ல ராசியாக இருக்குமென்று கூறுவதுண்டு.

குபேர பொம்மையை அறை, ஹால், உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென் கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், நிறைவான வருமானமும் கிடைக்கும்.

சிரித்துக் கொண்டிருக்கும் அந்த பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைவதோடு, பிரச்சனையை எதிர் நோக்க புது நம்பிக்கை பிறக்கும்.

புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். ஆதலால், குபேர பொம்மையை அவமானப்படுத்தக் கூடாது.

குபேர விளக்கு ஏற்றும் முறை…

வாரந்தோறும் வியாழக் கிழமை அன்று மாலை 5:30 மணிக்கு மேல் குபேர விளக்கை ஏற்றுவது சிறந்ததாகும்.

குபேர விளக்கினை சுத்தப்படுத்தி 3 அல்லது 5 என்ற கணக்கில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி குபேரருக்கு உகந்த பச்சை திரி போட்டு கிழக்கு திசை நோக்கி ஏற்றி வர வீட்டில் செல்வங்கள் நிலைத்து இருக்கும்.

விளக்கினை தானாக குளிர விடாமல் பூக்களால் பூர்த்தி செய்வது சிறந்ததாகும்.

குபேர தீபத்தை ஏற்றும்போது குபேர காயத்ரி மந்திரத்தை கூறிக் கொண்டே ஏற்றலாம்.

குபேர காயத்ரி மந்திரம்…

ஓம் யக்ஷ ராஜாய வித்மஹே

வைஸ்ரவ ணாய தீமஹி!

தந்தோ குபேர ப்ரசோதயாத்

இவ்வாறு செய்வதால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.