கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான இந்திய வம்சாவளி பெண்!! அனிதா ஆனந்தத்தால் நெகிழ்ச்சி!!

0
123

கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் சமீபத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவுடைய லிபரல் கட்சி சிறு கட்சிகளின் ஆதரவுடன் 150 இடங்களை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தற்போது ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராகி இருக்கிறார்.

இவருடைய அமைச்சரவையில் 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 39 அமைச்சர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்தும் இடம் பெற்றுள்ளார். கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக ஆனந்த் அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். அனிதாவின் தந்தை தமிழராக இருந்தாலும் தாய் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஹர்ஜீத் சஜ்ஜனுக்கு பதிலாக தற்போது அனைத்து நியமிக்கப்பட்டுள்ளார். கன்னட பாதுகாப்பு துறையில் ஏற்பட்ட பாலியல் புகார்களை ஹர்ஜீத் சஜ்ஜன் சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது

எனவேதான் அவர் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவருக்கு அமைச்சரவையில் வேறு துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனிதா சேவை மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.

இந்தியாவிலிருந்து கனடாவிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுத் தருவதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். கனடாவின் ஒக்குவில்லே தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட போது 46 சதவீதம் வாக்குகளை அவர் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.