Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குண்டு பலூனை மேலே பறக்க விட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன்!! ஆச்சரியத்தில் பொதுமக்கள்!..

The minister who flew the bomb balloon up. Anbarasan!! People in surprise!..

The minister who flew the bomb balloon up. Anbarasan!! People in surprise!..

குண்டு பலூனை மேலே பறக்க விட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன்!! ஆச்சரியத்தில் பொதுமக்கள்!..

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஒன்றை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராட்சஸ பலூனை ஒன்றை பறக்கவிடப்பட்டது.இந்நிலையில்  காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திங்கட்கிழமை அன்று வானில் பறக்க விட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறயிருக்கிறது. இந்தப் போட்டிகளில் 188 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்கயிருக்கிறார்கள்.

இந்தப் போட்டிகளின் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் தாமு அன்பரசன் ராட்சஸ பலூனை பறக்கவிட்டார். இந்த பலூனில் காஞ்சிபுரம் மாநகராட்சி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பொம்மை ஒன்று அச்சிடப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கா.சுந்தர், சி.வி.எம்.பி எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம். மகாலட்சுமி யுவராஜ், ஆணையர் ஜி.கண்ணன், மாநகர் மண்டல தலைவர்கள் எஸ்.சந்துரு, கே மோகன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இதைப் பார்த்த பொதுமக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தபடி பார்த்து ரசித்து வந்தனர்.

Exit mobile version