பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..!

0
259
#image_title

பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..!

நாம் வாழும் வாழ்க்கை முழுவதும் பணத் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். பணம் இருந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும். குழந்தை பிறப்பு செலவு, கல்விச்செலவு, திருமணச் செலவு என்று வாழக்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் செலவுகளை சமாளிக்க நாம் பணத்தை முறையாக சேமித்து வைத்திருக்க வேண்டும்.

ஆனால் நாம் பண விஷயத்தில் செய்யும் சில தவறுகளால் பணம் நம் கையில் தங்காமல் வந்த வேகத்தில் சென்று விடுகிறது. அப்படி நாம் என்ன தவறுகள் செய்கின்றோம் என்பதை அறிந்து இனி அந்த தவறை செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பணம் நம்மிடத்தில் தங்காமல் போக நம் செய்யும் தவறுகள்…

கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்திற்கு உரிய மரியாதை கொடுத்தால் மட்டுமே அவை நம்மிடத்தில் தங்கும். எனவே சம்பளம் வாங்கிய உடன் வீட்டு பூஜை அறையில் பணத்தை வைத்து வழிபட்டு எடுக்க வேண்டும்.

பணம் வைக்கும் இடத்தில் வாசனை நிறைந்து இருக்க வேண்டும். பச்சைக் கற்பூரம், மலர்கள் போன்ற வாசனை பொருட்களை பணத்துடன் வைப்பதினால் வீண் விரையம் ஆகாது. பண வரவு அதிகரிக்கும்.

பணத்தை பிறரிடம் கொடுக்கும் பொழுது கட்டை விரலை ரூபாய் தாளில் உள்ள சிங்கம் பதித்த இடத்தில் வைத்து தான் கொடுக்க வேண்டும்.

ரூபாய் தாளை மடிக்காமல் பயன்படுத்த வேண்டும். பர்ஸில் மட்டுமே ரூபாய் தாள் வைத்து எடுத்து செல்ல வேண்டும். பெண்கள் மார்பு பகுதியில் ரூபாய் தாள் வைக்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். அதேபோல் ஆண்கள் பேண்ட் பின்புறம் உள்ள பாக்கெட்டில் வைக்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு செய்வது முற்றிலும் தவறான செயல்.

ஒருவரிடம் பணம் வாங்கினால் செவ்வாய் கிழமை அன்று கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ரூபாய் தாள், சில்லறை காசு எதுவாக இருந்தாலும் அதை பணப்பெட்டி, பர்ஸ் உள்ளிட்டவைகளில் தான் வைக்க வேண்டும். கண்ட இடங்களில் போட்டு வைக்கக் கூடாது.