மாணவனை அடித்து விடுவேன் என கூறிய எம்.எல்.ஏ! மாநிலம் முழுக்க வெடித்த போராட்டம்!
பொதுவாக எம்எல்ஏ என்றாலே கொஞ்சம் திமிருடனும், தெனாவெட்டுடனும் தான் இருப்பார்கள். அது அவர்களுக்கு இயல்பாகவே அந்த பதவிக்கு வந்தால் வந்து விடுகிறது. ஆனால் சில நல்லவர்கள் மக்களின் குறையை தீர்த்துவைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் அந்த பதவியின் மூலம் அவர்களுக்கு ஆதாயம் தேடுபவர்கள் தான் அதிகம்.
கேரள மாநிலத்தில், சட்டசபை தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவாக பிரபல நடிகர் முகேஷ் உள்ளார். ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் தனது நண்பனுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் ஒன்று வாங்கி தரக்கோரி இந்த நடிகரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு உள்ளார். தன்னுடைய நண்பனுக்கு செல்போன் இல்லை.
எனவே அவருக்கு உதவ அந்த மாணவன், எம்எல்ஏ விற்கு அழைத்துள்ளார். அந்த மாணவன் மூன்று முறை அழைத்துள்ளார். அதன் பின்னர் நடிகர் அவரின் தொலைபேசியை எடுத்து அழைப்பதாக கூறி வைத்து விட்டார். பின்னர் மீண்டும் இன்னும் மூன்று முறை அழைத்துள்ளான் அந்த மாணவன்.
பின்னர் தொடர்புகொண்ட முகேஷ் மாணவனை கன்னாபின்னாவென்று திட்டி தீர்த்துள்ளார். மாணவனை அடித்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் விஷ்ணு தனது உள்ளூர் எம்எல்ஏவை அழைத்திருக்க வேண்டும். அதற்கு, பதிலாக தன்னை அழைக்க கூடாது என்றும், வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பதிவாகி கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மூலம் முகேஷுக்கு எதிராக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுக்க போராட்டங்கள் பல முன்னெடுத்து வைத்துள்ளனர். இளைஞரணி காங்கிரஸ் நேற்று பாலக்காட்டில் உருவபொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவருக்கு எதிராக கேரளா முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.