இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் இனி இவர்களுக்கு மட்டுமே! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்!

0
170
The money available through this program is now only for them! Adding Aadhaar Number is Mandatory!

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் இனி இவர்களுக்கு மட்டுமே! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்!

தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்  தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது செயல்படுதபட்டு வந்தது.இந்த திட்டத்தின் கீழ் சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குடும்பத்திற்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை தால 2000 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு 6000 ரூபாய் என விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணபரிமாற்றமாக வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் தற்போது வரை இத்திட்டத்தின் மூலம் இணைந்த பயனாளிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது.அதனையடுத்து கடந்த டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரையில் உள்ள காலத்திற்கு 13 வது தவணை தொகையை ஜனவரி மாதம் இறுதிக்குள் வங்கி கணக்கில் செலுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.அப்போது மாநில அரசுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த வங்கிக்கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகளுக்கு மட்டுமே இந்த முறை வழங்கப்படும் தொகையானது வழங்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளில் 8,84,120 பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை இன்னும் உறுதி செய்யாமல் உள்ளனர்.அதனால் ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகளும் தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.மேலும் பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகள் இரண்டு முறை தங்களுடைய ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.இல்லையெனில் அருகில் இருக்கும் பொது சேவை மையத்திற்கு சென்று தங்களின் கைரேகையை பதிவு செய்தோ அல்லது பி.எம்.கிசான் வலைதளத்தில் சென்று ஆதார் எண்ணுடன் இனைக்கபட்டுள்ள மொபைல் நம்பருக்கு வரும்  நான்கு இலக்க எண்ணை உள்ளீடு செய்தோ உங்களது ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.