Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக் பாஸ் சீசன் ஐந்து எப்போது தொடங்குகிறது தெரியுமா!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
மற்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் மெகா தொடர்கள் முதல் நிகழ்ச்சிகள் வரை அனைத்துமே ஒரு கட்டத்தில் போர் அடித்துவிடும் நிலையில் வந்து நிற்கும்.
ஆனால் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நெடுந்தொடர்களுமே தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அதைவிட சுவாரஸ்யம் என்னவென்றால் எந்த ஒரு தொடரிலும் யாரும் வெறுக்கத்தக்க எந்த ஒரு செயலும் நடைபெறாது என்று தான் சொல்ல வேண்டும்.

அதன் காரணமாகவே அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மெகா தொடர்கள் யாவும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் பிரபலங்கள் வீட்டில் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காகவே தயார் செய்யப்பட்ட நிகழ்ச்சிதான் பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியானது மிக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போது இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்திருக்கின்ற நிலையில் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க இருப்பதாக சொல்கிறார்கள்.

இதில் தொகுப்பாளராக நடிகர் கமலஹாசன் இருப்பதாலேயே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சி பார்த்து வந்ததாக சொல்கிறார்கள். அவர் தற்சமயம் அரசியல் மேடைகளில் தோன்றுவதால் அவர் அடுத்த சீசனை தொகுத்து வழங்குவது கடினம்.ஆகவே பிக் பாஸ் ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்குவதற்காக யூடியூப் பிரபலம் மதன் கௌரி ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version